✍ சார்மதி
தமிழ்த் தாத்தா உ.வே சாமிநாதையர் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்;கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார்.
மாபெரும் உன்னத சிறப்புகளை உடையது தமிழ் மொழி. தொன்மையானது. தனித்தன்மை வாய்ந்தது. உயர்ந்த சிந்தனைகளை உடையது. இலக்கண இலக்கிய வளங்கள் கொண்டது. செம்மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது இவ்வுயரிய தமிழ்; மொழியின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர்கள் ஏராளம் ஏராளம். தமிழ் வானில் சுடர்விடும் விண்மீன்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே சாமிநாதையர். (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்) இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த்தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார்.
1855 ஆம் ஆண்டு பிப்ரவரி; மாதம்; 19ஆம் நாள். திருவாரூர் மாவட்டத்தில்; உத்தமதானபுரத்தில் வேங்;கட சுப்பையர் , சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றினார். ஆரம்பக் கல்வியை தன் சொந்த ஊரில் இருந்த ஆசிரியர்களிடம் பயின்றார். இளமையிலேயே இசையில் நாட்டம் கொண்ட அவர் இசைக்கல்வியையும் பயின்றார்;. விளையாட்டிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. தனது பதினேழாம் அகவையில் மகாவி;த்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைச் சந்தி;த்தார். அவ்வமயம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். சாமிநாதர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளைத் தனது ஆசானின் திருவடியில் செலவிட்டு செந்தமிழை முழுமையாகக் கற்றார்.
ஒரு நாள் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு வந்த போது அவர் சாமிநாதரிம் “உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். உ.வே.சா அவர்களின் இயற்பெயர் வேங்கடராமன்(குடும்ப வழக்கத்தை ஒட்டி); என்பதாகும். அதற்கு சாமிநாதர் “வேங்கடாசலபதி குலதெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே கொள்வது வழக்கம்.” என்று தெரிவித்தார். “உமக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?” என்று கேட்டார். “எங்கள்
வீட்டில் என்னைச் சாமா என்று அழைப்பார்கள்” என்று சாமிநாதர் கூறினார். “அப்படி ஒரு பெயர் உண்டா என்ன?” என்று பிள்ளையவர்கள் கேட்க “அது என்னுடைய முழுப்பெயரன்று. சாமிநாதன் என்பதையே அப்படி மாற்றி வழங்;குவார்கள் என்று கூறினார். “அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது? உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீPரும்
இனிமேல் அப்பெயரையேச் சொல்லிக் கொள்ளும்” என்று பிள்ளையவர்;கள்
சொன்னார். சாமிநாதரும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். வேங்கடராமனாக இருந்த அவர் அன்று முதல் சாமிநாதனாகி விட்டார். பிள்ளளையவர்கள் விருப்பத்தின்;
படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர். அன்பு கனிந்த பிள்ளையவர்களின் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே உ.வே.சா.விற்கு நிலைத்து விட்டது.
உ.வே.சா.வின் குடும்பம் வறுமையில் இருந்ததால் தனது தந்தையாருடன் புராண விரிவுரைகள் நடத்தி பொருள் ஈட்டினார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். செவ்வந்திபுரத்தில் வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய மடத்தைச் சிறப்பித்ததுடன் பிறரால் முன்னர் இயற்றப்பட்டிருந்த செய்யுள்களுடன் தாமும் செய்யுள்களை யாத்துச் சிறப்பித்தார். வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அதுவே அவரது முதல் பதி;;ப்புப் பணி ஆகும். இரண்டாவதாக திருக்குடந்தைப் புராணம் என்ற நூலைப் பதிப்பித்தார். நூல்களைப் பதிப்பிப்பதற்காக தனது வாழ்நாளை தியாகம் செய்தார். இவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து பதிப்பிக்கும் அறப்பணியைச் செய்தார். இவர் ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்;படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி அந்த நூல்களைக் குறித்த முழு புரிதலுக்கும் வழிவகுத்தார். தனித்தனி சொற்களுக்கு விளக்கம் தந்ததோடு சில நூல்களுக்கு அரிய உரை எழுதினார். சுமார் 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதி;த்தது மட்டுமன்றி 3000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து
ஏடுகளையும் சேகரித்தார். தனது சொத்துக்களை விற்று பல நூல்களைபு; பதிப்பி;;த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீவகசிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ்ப்புலமை வேண்டும் அது உ.வே.சா அவர்களிடம் இருந்தது மிகச்சிறப்பு. உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர். சென்னை பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு தான் சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற நூலாக பின்னர் வெளிவந்தது. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களி;ப்பைப் பாராட்டி அவருக்கு முனைவர் பட்டம் அளித்தது. அந்தப் பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் இவரே. மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை ஆங்கில அரசும் தட்சண கலாநிதி என்ற பட்டத்தை ஸ்ரீசங்கராச்சார்யார் சுவாமிகளும் குடந்தை நகர் கலைஞர் என்ற பட்டத்தை மகாகவி பாரதியார் அவர்களும் வழங்கி அவரைப் பெருமைப்படுத்தினர். மற்றும் பதிப்புத்துறையின் வேந்தர், திராவிட வித்ய பூஷணம் போன்ற பட்டங்;களைப் பெற்று அவைகளுக்குப் பெருமை சேர்த்தார். பாரத அரசு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி; மாதம் இவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது. உ.வே.சா. அவர்கள் உழைத்திராவிட்டால் சிலப்பதிகாரம் பற்றி தெரியாமலேயே போயிருக்கும். அகநானுறு, புறநானுறு பற்றி வேறுபாடு தெரிந்திருக்காது. சங்க இலக்கியங்கள் பற்றி இன்று நாம் பேசுவதற்குக் காரணம் உ.வே.சா. அவர்களே! மணிமேகலை மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கும். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாhhளம். பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும் வடமொழி அவ்வுலக வாழ்விற்கும் பயன்படும் என்று அறிவுறுத்தினால் என் அன்னைத் தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என்று கூறுவாராம். உத்தமதானபுரத்தில் உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லம் ஆக்கப்பட்டுள்ளது. 1942ல் இவர் பெயரால் சென்னை
வசந்த நகரில் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக எழுதி வந்தார். மேலும் இவரது வரலாறு தமிழ்த்தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டது. தமிழின் ஈடுஇணையற்ற இலக்கியப் படைப்புகளை நாம் இன்று கற்று சுவைப்பதற்கு அடிகோலியவர் அவர் தான். காலத்தால் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷப் படைப்புகளைக் காத்தார். கரையான் அரிப்பிற்கும் தீயின் நாக்கிற்கும் செல் பாதிப்பிற்கும் பல படைப்புகள் இரையாயின. இழந்தவை போக எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையி;ன் பார்வைக்குக் கொண்டு வந்தவர். இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் உலகறியச் செய்த உ.வே.சா. அவர்கள்; 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் தனது பொய்யுடலை நீத்தார். அவரது சிறந்த தமிழ்ப் பணியால் உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.. ஒப்பாரும்; மிக்காரும் இல்லாத் தமிழ்ச்சான்றோர் இவர். தமிழ் கூறும் நல்லுலகில் அவர் ஆற்றிய அரும்பணியை முழுமையாக ஆற்றுவதற்கு அவர் காலத்திற்கு முன்பும் யாரும் இல்லை இனியும் யாரும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. அவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்ப்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் கருத்துக் கருவூலம். தமிழ்த்தாயின் தவப்புதல்வர். இவ்வுலகை விட்டு அவர் மறைந்தாலும் காலமெலாம் வாழும் தமிழ்மொழி போல் தமிழ்த்தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார். வாழ்க தமிழ்த்தாத்தா!! வளர்க அவர்தம் புகழ் !!
(எழுத்தாளர் ஒரு மூத்த தமிழ் பண்டிதர், ஸ்ரீ ராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ் மொழி கற்பிக்கிறார்.)
Excellent article .. clear discription about un sung Tamil giant.DR U VE SWAMINATHA IYER.