சர்வதேச தாய்மொழி தினம்

மனித இனம் தோன்றியதுமுதல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பைஏற்படுத்திக் கொள்ளதாங்கள்; அறிந்தசொற்களைத் தொகுத்துமொழியாகமாற்றினர்;. உலகில் ஏறத்தாழஆறாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஒருமொழியின் சிறப்புஅதன் தொன்மையில் இல்லை;தொடர்ச்சியில் தான் இருக்கிறது.

ஒவ்வொரு மொழிக்கும் அந்தமொழிக்கேயுரிய சிறப்பம்சங்கள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பதுஅவரவர் தாய்மொழியாகும்.சிந்தனைஎன்னும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி என்னும் உளியால் தான் முடியும.; எழுத்தறிவிற்குப்பெரிதும் உதவுவதும் அறிவின் திறவுகோலாக விளங்குவதும ;தாய்மொழியே.ஆப்பிரிக்கா நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் பிறமொழிக் கல்வியினைக் கற்றவர்களைவிட தாய்மொழிக் கல்வியினைக் கற்றவர்களுக்கு 40 சதவிகிதம் எழுத்தறிவுத் திறன் அதிகமாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.கண் போன்று போற்றப்பட வேணடிய தாய்; ;மொழிகளின் அவசியத்தையும் சிறப்பையும் எடுத்துணர்த்த ஒவ்வொரு ஆண்டும் பி;ப்ரவரி மாதம் 21ஆம் நாள் சர்வதேச தாய்மொழிதினம் கொண்டாடப்படுகிறது.

1952ஆம் ஆண்டு இந்நாளில் அன்றையகிழக்குபாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரிபோராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது சில மாணவர்கள் உயிர் நீ;த்தனர்.அம்மாணவர்களின் நினைவாகத்தான் பிப்ரவரி 21ஆம் நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1947ஆம்ஆண்டு கிழக்கு பாகிஸ்தானும்; (தற்போதைய வங்காளதேசம்);மேற்கு பாகிஸ்தானும் (தற்போதைய பாகிஸ்தான்) இணைக்கப்பட்டு, பாகிஸ்தான் உருவாகியது. பாரதத்திற்கு இடையில்  பிரிக்கப்பட்;ட இப்பகுதிகள் கலாச்சாரம் மொழிகளால் வேறுபட்டு இருந்தன. வங்;காளதேசத்தில் பெரும்பான்மைமக்கள் வங்காளமொழியைப் பேசினாலும் 1948 ஆம் ஆண்டின் அன்றைய பாகிஸ்தான் உருதுமொழியைப்பாகி ஸ்தானின ;ஒரே தேசியமொழியாக அறிவித்தது. இதை ஏற்காத கிழக்கு பாகிஸ்தான் மக்கள், வங்காளமொழியை குறைந்தபட்சம் தேசியமொழிகளில் ஒன்றாகவாவது அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் ஆதரவுடன் பேரணிகளையும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்தனர்.ஆனால் அவைகளைப் பாகிஸ்தான் அரசாங்கம் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ம் நாள் நடைபெற்ற பேரணியில் காவல் துறையினர் துப்பாக்கிச சூடுநடத்தினர். அதில் சலாம்,பர்கட்,ரபீக்,ஜபார் மற்றும் ஷபியூூர் ஆகிய மாணவர்கள் மாண்டு போயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிகழ்வு வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றது. அன்றிலிருந்து வங்காளதேசத்தினர் அந்நாளைத் துக்க நாளாகவும் தேசிய விடுமுறை நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். தாய்மொழிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த அம்மாணவர்களின் நினைவாகச் சர்வதேச தாய்மொழிதினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள் வீண் போகவில்லை. சமூகங்களின் மொழி. பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளைப் பேணவேண்டும் மற்றும் அவற்றிற்கிடையே ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அனைத்துலக அமைப்புகளின் ஆதரவுடன்; யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு பொதுமாநாட்டின் போது, 30வது அமர்வில் பிப்ரவரி 21ஆம் நாளை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுதும் சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வருகின்றது..

உலகில் தோன்றுகின்ற எந்த உயிர்க்கும் முதல் சொந்தம் தாய் தான் தாய்வழியாகப் பிறக்கும் குழந்தைக்குத் தாயி;ன் குரல் தான் முதல்மொழி. குழந்தைக்குத் தாயின் மீதுள்ள உரிமையைப் போலவேn மாழியின் மீதும் உரிமை உள்ளது. மொழி என்பது சாதாரண வார்த்தை அன்று அது வாழ்வியலும் கூட. உலகில் கல்வியில்  சிறந்து விளங்கும் நாடுகளில் தாய்மொழியே பிரதான கற்றல் மொழியாக உள்ளது.

நூற்றிற்கும் குறைவான மொழிகள் தான் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலகமயமாக்கலால் தாய்மொழிகள் அருகிவிடும்; அபாயம் ஏற்படலாம். மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ள தத்தம் தாய்மொழியினைக் காத்துக் கொள்ள வேண்டியது மிகஅவசியம் தாய்மொழிக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். நாம் அனைவரும் நம் தாய்மொழியைப் பற்றுடன் பேணிப் காப்போம்! தாய்மொழியின் பெருமையைப் போற்றுவோம் !

வாழ்க தாய்மொழி!!

வளர்க அதன் மேன்மை!!

यह भी पढ़ेंअंतरराष्ट्रीय मातृभाषा दिवस

One thought on “சர்வதேச தாய்மொழி தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *